முன்னுரையும் குறிக்கோளும்
Introduction and Purpose
அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழில் எழுதுவதிலும் மொழிபெயர்ப்பதிலும் உள்ள ஒரு பெரும் இடர்ப்பாடு என்னவென்றால், அதற்குத் தேவையான கலைச்சொற்கள் இல்லாததாகும். கலைச்சொல் இல்லாத ஒரு கருத்துருவுக்குப் பல எழுத்தாளர்களும் அவரவர் உடனடித் தேவைக்குத் தக்கவாறு பலவிதமாகக் கலைச்சொற்களை உருவாக்குகின்றனர். அவ்வாறு உருவாகும் கலைச்சொற்கள் ஒரே சீரான நடையைப் பின்பற்றி அமைவதில்லை. அவற்றுள் சில செந்தமிழ்ச் சொற்களாகவும், சில கலப்புமொழிச் சொற்களாகவும், வேறு சில ஆங்கிலச் சொற்களாவும் அமைகின்றன. எல்லா எழுத்தாளர்களும் ஒரேசீராக எழுத வேண்டுமானாலும், ஒன்றுடனொன்று இயைபுடைய அறிவியல் நூல்கள் தமிழில் தோன்ற வேண்டுமானாலும், அனைத்துக் கலைச்சொற்களும் அடங்கிய ஒரு பட்டியலை உருவாக்கி அனைவரும் அந்தப் பட்டியலையே பயன்படுத்துவதான ஒரு மரபைத் தமிழ் எழுத்தாளர்கள் ஏற்க வேண்டும். அவ்வாறான ஒரு பட்டியலை உருவாக்கி அறிஞர்களிடம் முன்வைப்பதே இம்முயற்சியின் நோக்கம்.
The lack of technical terminology in Tamil is a significant impediment to writing and translating scientific and technological literature. For a concept lacking a technical term, different authors create different terms to suit their immediate needs. The technical terms created this way do not follow a uniform style. Some of them happen to be செந்தமிழ் words, some of mixed origin, and some others English words. If all authors were to follow a uniform terminology, and if scientific books consistent with each other were to appear in Tamil, we should create a list containing all technical terms and writers should adopt a convention to use the same list. The purpose of this work is to create such a list and submit to scholars as a proposal.
பல கலைச்சொல் அகராதிகள் தமிழில் ஏற்கெனவே இருக்கலாம். இதுவும் மற்றொரு அகராதியன்று. இந்நூலின் நோக்கம் ஓர் அகராதியின் நோக்கத்திலிருந்து மாறுபட்டது. அகராதியின் நோக்கம் சொல்லை வரையறுத்துப் பொருளை விளக்குவதாகும். சொல்லில் பொருள்மயக்கம் இருப்பின், அச்சொல்லின் எல்லாப் பொருட்களையும் விளக்குகிறது அகராதி. மாறாக, இந்நூலின் நோக்கம் ஓர் ஆங்கிலக் கலைச்சொல்லுக்கு இணையான ஒரு தமிழ்க் கலைச்சொல்லைத் தருவதும், பொருள்மயக்கம் ஏற்படாதவாறு ஒரு சொற்பட்டியலை உருவாக்குவதும் ஆகும். ஒரே கருத்துருவுக்குப் பல துறைகளிலும் வழங்கிவரும் வெவ்வேறு சொற்களையும் பட்டியலிடுகிறது அகராதி. ஒரு கருத்துருவைக் குறிக்கப் பல துறைகளிலும் பயன்படுமாறு ஒரே சொல்லை முன்வைக்க முனைகிறது இந்நூல். பழக்கத்தில் வந்த சொற்களைப் பட்டியலிட்டுப் பொருள் விளக்குகிறது அகராதி. பழக்கத்தில் வரவேண்டிய சொற்களை முன்வைக்கிறது இந்நூல்.
There may be many technical dictionaries in Tamil already. This is not another technical dictionary. The purpose of this work is different from that of a dictionary. The purpose of a dictionary is to define words and explain meanings. If there is ambiguity in a word, a dictionary explains all meanings of the work. In contrast, the purpose of this work is to present a Tamil technical word corresponding to an English technical word and create a list of words in a such a way that ambiguities do not arise. A dictionary lists different words in use in different disciplines for the same concept. This book attempts to propose a single word to represent a concept in many areas. A dictionary lists and explains the meanings of words already in use. This book proposes words that should become in common use.
மக்கள் பேசும் இயல் மொழிகளில் ஒரே சொல் சூழமைவைப் பொறுத்துப் பலவாறு பொருள் தருவது இயல்பு. இது ஆங்கிலம் உட்பட எல்லா மொழிகளுக்கும் பொதுவான பண்பு. ஆனால், அறிவியலில் பயன்படும் கலைச்சொற்கள் இயன்றவரை திட்டவட்டமான வரையறை கொண்டவை. இங்கு ஒரே சொல் பல பொருட்களைத் தருவதும், ஒரே கருத்துருவுக்குப் பல சொற்கள் இருப்பதும் அரிது. விலங்கியல், தாவரவியல், வேதியியல் போன்ற துறைகளில் ஒவ்வோர் இனத்துக்கும் ஓர் ஒருத்துவப் பெயரை இடுவதற்கான கண்டிப்பான விதிமுறைகள் உள்ளன. இவ்வாறிருக்கும்போது, தமிழிலும் ஒரு திட்டவட்டமான பட்டியலை உருவாக்குவது சாத்தியமானது மட்டுமல்லாமல் அவசியமானதாகவும் ஆகிறது.
In natural languages spoken by people it is common that a word has different meanings in different contexts. This is a common property of all languages including English. However, technical words used in science have definite definitions as much as possible. Here it is rare that a single word has many meanings or there are many words for a single concept. In zoology, botany, and chemistry, there are strict rules to assign a unique name to a species. Given this situation, it is not only possible but also necessary to create a definite list in Tamil as well.
இவ்வாறான பட்டியல் முழுமையானதாக இருக்க வேண்டியதும் அவசியம். எந்தவொரு ஆங்கிலக் கலைச்சொல்லைத் தேடினாலும் அதற்கிணையான தமிழ்க் கலைச்சொல்லைத் தருவதாக இப்பட்டியல் இருக்கவேண்டும். ஆனால், அறிவியல் தொழில்நுட்பத் துறைகளின் மொத்த வெளி மிகவும் விரிவானது. அவ்வெளியின் எல்லா மூலை முடுக்குகளையும் சென்றடைந்தால்தான் நம் பட்டியலை முழுமையானதாகக் கருதலாம். மேலும், அறிவியல் துறைகள் அனைத்தும் வளர்ந்து வரும் துறைகள். புதிய கலைச் சொற்கள் ஆங்கிலத்திலும் வேறு பல மொழிகளிலும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. அதற்குத் தகுந்தவாறு நம் பட்டியலும் தொடர்ச்சியாக இற்றையடைந்து வரவேண்டும். அறிவியலின் விரிவையும் வளர்ச்சியையும் வென்று முழுமையை எய்துவது ஓர் இமயப் பணி. அது இயலக்கூடியதா என்பது ஐயத்துக்கிடமானதே. ஆயினும் முயன்றால்தானே சாத்தியமாகும்? இமயத்தின் உச்சியையும் மனிதன் சென்றடைந்து விட்டானல்லவா? அறிவியல் துறைகள் அகலமாகவும், ஆழமாகவும், திறந்தனவாகவும் இருப்பதால் முழுமை என்பது அடையத்தக்கதன்று; ஆனால் அணுகத்தக்கது. கணிதமுறையில் கூறின், முழுமை என்பது தொலைதொடுவகையில் வேண்டுமளவு நெருக்கமாக அணுகத்தக்க ஓர் எல்லை.
It is essential that such a list be complete. For every English technical word to be searched, the list should yield the corresponding Tamil technical word. But the total space of science and technology is very broad. Our list can be considered complete only if it reaches every nook and corner of that space. Moreover, all scientific disciplines are developing areas. New technical words are being formed in English and other languages. Our list should also get updated accordingly on a continuous basis. Conquering the breadth and growth of science and achieving completeness is a monumental task. It is doubtful whether it is feasible. But we must try. Monuments have been built in the past! Since scientific fields are broad, deep, and open, completeness is not achievable; but it can be approached. Mathematically, completeness is a limit that can be asymptotically approached arbitrarily closely.
சுருக்கமாக, அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் ஆங்கிலத்தில் வழங்கும் கலைச்சொற்கள் ஒவ்வொன்றுக்கும் இணையாக ஒரு துல்லியமான, திட்டவட்டமான, ஒருத்துவத் தமிழ்க் கலைச்சொல்லைத் தரும் முழுமையான, ஒன்றுக்கொன்றான, தன்னியைபான பட்டியலை முன்வைப்பதன் முதற்படி இந்நூல்.
In summary, this work is the first step in proposing a complete, one-to-one, and self-consistent list containing a precise, definite, and unique Tamil technical word for a given English technical word in science and technology.
நுரையீரலைப் பற்றிப் படிக்கும்போது alveoli என்ற சொல்லை எதிர்கொள்கிறோம். அதிகம் சிந்திக்காமல், alveoli - காற்றுச் சிற்றறை என்று எழுதிப் பழக்கத்தில் கொண்டுவந்து விட்டோமானால், தேன்கூடு, பல்லியல் போன்ற மற்றச் சூழமைவுகளில் alveoli வரும்போது, காற்றுச்சிற்றறை என்று சொல்ல இயலாமல் திண்டாடி, வேறு சொற்களை உண்டாக்க வேண்டிய அவசியத்துக்கு உள்ளாவோம். இந்தச் சிக்கலைத் தவிர்க்க, ஆங்கிலச் சொல் உணர்த்தும் பொருளை மிகாமலும் குறையாமலும் அவ்வாறே குறிக்கும் தமிழ்ச்சொல்லை இயன்றவரை முதலிலேயே தேர்ந்தெடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, alveoli – சிற்றறை என்றால், அது எல்லா இடங்களிலும் பொருந்தும். மிகாமலும் குறையாமலும் பொருளுணர்த்தும் நிகரான சொற்களைத் துல்லியமானவை என்கிறோம்.
While studying about lungs, we come across the term alveoli. Without thinking much about it, if we write alveoli - காற்றுச் சிற்றறை and it becomes common usage, then we won’t be able to use காற்றுச் சிற்றறை when we come across alveoli in other contexts such as honeycomb and dentistry; we would have to create new words. To avoid this problem, we should select a Tamil word representing the exact meaning of the English word as much as possible in the first place. For example alveoli – சிற்றறை would be suitable in all contexts. Words which neither exceed nor are deficient in meaning are said to be precise.
Compute, calculate ஆகிய இரு சொற்களும் ஒரே பொருளுடையவை. ஆயினும் இன்றைய நடைமுறைப் பழக்கத்தில் computer, calculator என்பவை வெவ்வேறு கருவிகளைக் குறிப்பது ஒரு பயன்பாட்டு மரபினால்தான். இதுபோன்ற மரபுகள் தமிழிலும் உருவாக வேண்டும். இணையத்தில் விக்சனரி என்ற மதிப்பும் பயனும் மிக்க ஒரு வளம் உள்ளது. அதில் computer என்ற சொல்லுக்குப் பொருளாகக் கணினி, கணிப்பொறி, கணிப்பான், கணியம் ஆகிய நான்கு சொற்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. விக்சனரி ஓர் அகராதியாதலால், அதன் குறிக்கோள் computer என்ற ஆங்கிலச் சொல்லின் பொருளை விளக்குவதேயாகும். ஒருவேளை வெவ்வேறு இடங்களில் computer என்ற பொருளில் இந்நான்கு சொற்களுமே பயன்படுத்தப் பட்டிருக்கலாம். இந்நான்கு சொற்களில் வெகுவாகப் பழக்கத்தில் இருக்கும் ஒன்றை மட்டும் தேர்ந்து கொள்வது இந்நூலின் குறிக்கோள்களுள் ஒன்று. ஆகவே, இந்நூலில் உள்ள பட்டியலில் computer என்ற சொல்லுக்கு நிகராகக் கணினி என்ற ஒரே ஒரு சொல் மட்டும் காணப்படுகிறது. இது திட்டவட்டம். கணினி என்ற சொல்லை computer-க்கு நிகராகக் குறித்தபின், அதே சொல்லை வேறொரு கலைச்சொல்லுக்கு இணையாக இந்நூலின் பட்டியல் குறிக்கவில்லை. இது ஒருத்துவம்.
The two words compute and calculate have the same meaning. It is merely by a usage convention that computer and calculator represent different instruments in practice. Such conventions should arise in Tamil too. There is a valuable and useful internet resource called Wiktionary. It lists the four words கணினி, கணிப்பொறி, கணிப்பான், கணியம் for computer. Since Wiktionary is a dictionary, its purpose is to explain the meaning of the word computer. Perhaps these four words have been used at different places to mean computer. One of the purposes in this book is to select one from these four words that is most commonly used. Hence, only the word கணினி is listed for computer in the table contained in this book. This is definiteness. After specifying கணினி to correspond to computer, the list in this book does not specify the same word for another technical word. This is uniqueness.
இந்நூலில் ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களடங்கிய ஒரு பட்டியல் உள்ளது. இப்பட்டியலின் தகவலடக்கம் தமிழ்ச்சொற்களுக்கு நிகரான ஆங்கிலச் சொற்களடங்கிய பட்டியலாக மீண்டும் தரப்படுகிறது. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குச் செல்லும் பட்டியலின் பதிகைகள் திட்டவட்டமானவையாகையால், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குச் செல்லும் பட்டியலின் பதிகைகள் ஒருத்துவமானவை. முந்தையவை ஒருத்துவமானவையாகையால், பிந்தையவை திட்டவட்டமானவை. வேறுவிதமாகக் கூறின், ஒவ்வொரு பட்டியலும் ஆங்கிலக் கலைச்சொற்கணம், தமிழ்க் கலைச்சொற்கணம் ஆகியவற்றிடையே ஓர் ஒன்றுக்கொன்றான இணைபடத்தைக் குறிக்கிறது.
This book contains a list of Tamil words corresponding to English words. The information content of this list is presented again as a list of English words corresponding to Tamil words. Since the list entries from English to Tamil are definite, the list entries from Tamil to English are unique. Since the former are unique, the latter are definite. In other words, each list represents a one-to-one map between the set of Tamil technical words and the set of English technical words.
தமிழ்க் கலைச்சொல்லிலிருந்து ஆங்கிலக் கலைச் சொல்லைப் பெறவும் ஒரு திட்டவட்டமான ஒருத்துவமான வழி இருப்பதால், மூல ஆங்கிலச் சொல் மீள்பெறக்கூடியது. இந்தத் தமிழாக்கச் செயல்முறையும் மீள்திருப்பத்தகுந்தது. ஆகவே, தமிழாக்கத்தின்போது தகவலிழப்பு நேரிடுமோ என்ற அச்சம் தேவையில்லை.
Since there is a definite and unique way to get an English technical word from the Tamil technical word, the original English word is retrievable. This process of translation is thus reversible. There need not be any fear of loss of information during translation.
Hetero- என்ற முன்னொட்டு அறிவியல் துறைகள் பலவற்றில் பல இடங்களில் இடம்பெறுகிறது. அதற்குறிய தமிழ் முன்னொட்டைத் தேர்ந்தெடுத்து எல்லா இடங்களிலும் இயன்றவரை அதையே பயன்படுத்தினால், hetero- என்று தொடங்கும் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களிடையேயும் ஒரு இயைபு நிலவும். இவ்வாறு தொடர்புடைய சொற்கள் அதே தொடர்பைத் தமிழிலும் தக்கவைக்குமாறு வடிவமைத்த சொற்பட்டியல் தன்னியைபு உடையது எனப்படுகிறது.
The prefix hetero- appears at several places in scientific areas. If we select a suitable Tamil prefix for it and use the same everywhere as much as possible, there will be a consistency among the Tamil words paralleling the words starting with hetero. A list designed so that related words retain the same relationship in Tamil is said to be self-consistent.
Metamorphosis என்ற சொல்லுக்குப் பல துறைகளிலும் வெவ்வேறு சொற்கள் பழக்கத்திலிருப்பதாக விக்சனரி கூறுகிறது. இயற்பியலில் உருமாற்றம், மீன்வளத்தில் வளருருமாற்றம், வேளாண்மையில் உருவமாறுதல், இவ்வாறாக இன்னும் பல துறைகளில் விக்சனரி பொருள் கூறுகிறது. இந்நிலை மாறி, எல்லாத் துறையினரும் ஒரே சொல்லைப் பயன்படுத்தல் நலம். மேலும் transformation என்ற சொல்லுக்கும் உருமாற்றம் என்ற சொல் பொருளாகத் தரப்படுகிறது. Transformation என்பதை உருமாற்றம், என்றும் metamorphosis என்பதை வளருருமாற்றம் என்றும் எப்போதும் குறிப்பிட வேண்டும் என்று இந்நூலில் பரிந்துரைக்கிறேன். எல்லாத் துறையினரும் ஒரே மரபைப் பின்பற்றுவது துறையிடை இயைபை உண்டாக்கும்.
According to Wiktionary there are different words in use in different disciplines for the word metamorphosis. Wiktionary says the meaning as உருமாற்றம் in physics, வளருருமாற்றம் in fishery, உருவமாறுதல் in agriculture, and so on in other disciplines. This situation should change; it is good to use the same word in all disciplines. In addition, உருமாற்றம் is given as the meaning for transformation too. I recommend in this book that transformation should always be written as உருமாற்றம் and metamorphosis as வளருருமாற்றம். All disciplines following the same convention would lead to interdisciplinary consistency.
Respiration என்ற சொல்லுக்கு இணையாக, சிலவிடங்களில் சுவாசம் என்ற சொல்லும், வேறு சில இடங்களில் மூச்சுவிடல் என்று சொல்லும் பயன்படுவது மற்றொரு விதமான இயைபின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இந்நிலையில் சுவாசம் என்பதும் மூச்சுவிடல் என்பதும் ஒரே கருத்துருவைக் குறிக்கின்றனவா அல்லது அவை வெவ்வேறானவையா என்ற ஐயம் வாசிப்போரின் மனதில் எழ வாய்ப்புண்டு. வாசிப்போர் மாணவராயின், ஐயம் குழப்பமாகவே மாறும். எழுத்தாளர் இயைபுடன் செயல்படுவது இந்நிலையை மாற்றும்.
The use of சுவாசம் at some places and மூச்சுவிடல் at other places corresponding to respiration is an example of another kind of inconsistency. Under these circumstances, readers are likely to wonder whether சுவாசம் and மூச்சுவிடல் represent the same or different concepts. If the readers are students, this leads to confusion. This can be remedied with writers’ consistency.
தமிழ்நாடு அரசு வெளியிடும் பாடநூல்களில் பலவிடங்களிலும் இயைபின்மையைக் காணலாம். எடுத்துக்காட்டாக, trigonometry என்ற சொல்லுக்குப் பத்தாம் வகுப்புக் கணித நூலில் முக்கோணவியல் என்றும், பதினொன்றாம் வகுப்புக் கணித நூலில் திரிகோணமிதி என்றும் எழுதப்பட்டுள்ளன. Biodiversity என்ற சொல்லுக்கு நிகராகப் பதினொன்றாம் வகுப்புத் தாவரவியல் நூலில் பல்லுயிர் தன்மை என்றும், அதே வகுப்பு விலங்கியல் நூலில் பல்லுயிரியல்பு என்றும் எழுதப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் எப்போதும் biodiversity என்றே எழுதுகிறோமேயன்றிச் சிலவிடங்களில் diversity of life என்று எழுதுவதில்லை; ஏனென்றால் biodiversity என்ற சொல்லை ஒரு கலைச்சொல்லாக ஏற்றுக்கொண்டோம். தமிழிலும் அனைத்து எழுத்தாளர்களும் எல்லா இடங்களிலும் இயைபுடன் ஒரே சொல்லைப் பயன்படுத்துவது நலம். அதற்குத் தேவையான ஒரு தீர்வகமாக இந்நூல் பயன்படுமென்பது என் நம்பிக்கை.
We can find several occurences of inconsistencies in textbooks published by Tamilnadu government. For example, the tenth standard mathematics book uses முக்கோணவியல் for trigonometry and eleventh standard book uses திரிகோணமிதி. The eleventh standard Botany textbook uses பல்லுயிர் தன்மை for biodiversity and the Zoology textbook for the same standard uses பல்லுயிரியல்பு. In English we write biodiversity everywhere and do not write diversity of life at some places; because we have accepted biodiversity as a technical term. In Tamil too, it is better that all writers use the same word consistently in all contexts. I hope that this book will serve as a clearing house for that purpose.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் இயல்மொழியில் ஒரு சொல்லுக்குப் பல பொருட்கள் இருப்பதும், சூழமைவைப் பொறுத்து பொருள் மாறுபடுவதும் வெகுவாகக் காணப்படுகின்றன. பொதுவாக இரண்டு இயல்மொழிகளின் சொற்களுக்கிடையே ஒரு ஒன்றுக்கொன்றான தொடர்பை ஏற்படுத்துவது சாத்தியமன்று. ஆகவேதான் ஒரு மொழியின் ஒவ்வொரு சொல்லுக்கும் நிகராக மற்றொரு மொழியின் பல சொற்களைத் தருகிறது அகராதி. ஆனால், பெரும்பாலான அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொற்கள் துல்லியமான வரையறையுடன் விளங்குகின்றன. முக்கியமாக, உயர் அறிவியலின் தனித்துவமாக்கிய துறைகளில் வழங்கும் கலைச்சொற்கள் ஒருத்துவமானவை. அதாவது, ஒவ்வொரு சொல்லும் ஒரு கருத்துருவைக் குறிப்பதற்காக இயற்றப்பட்டது; ஒரு கருத்துருவைக் குறிக்க பெரும்பாலும் ஒரு சொல் மட்டுமே உள்ளது. இந்நிலையில் தமிழிலும் இவ்வாறான ஒரு கலைச்சொற் பட்டியலை உருவாக்குவதும், தமிழ்க் கலைச்சொற்களுக்கும் ஆங்கிலக் கலைச்சொற்களுக்கும் இடையே ஓர் ஒன்றுக்கொன்றான தொடர்பை அமைப்பதும் சாத்தியமாகிறது.
In the natural languages we use every day, it is common that a single word has many meanings and that the meaning changes with context. In general, it is not possible to make a one-to-one correspondence between the words of two natural languages. This is why a dictionary lists many words of one language corresponding to each word of another language. However, most scientific and technological terms are precisely defined. In particular the technical terms practiced in specialized branches of advanced science are unique. In other words, each word is made to denote a single concept; and each concept generally has only one word. Under these circumstances it becomes possible to construct a similar list of technical terms in Tamil and to make a one-to-one correspondence between Tamil and English terms.
கணினி மூலம் தானாகவே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் மென்பொருட்கள் எதிர்காலத்தில் உருவாகலாம். சூழமைவு சார் மொழிகளைவிடச் சூழமைவு சாரா மொழிகள் சொல்லலசலுக்கும் பொருளுணர்வுக்கும் எளிமையாவை என்பது கணினி அறிவியலார் அறிந்த உண்மை. இயல் மொழிகள் வெகுவாகச் சூழமைவு சார்ந்தவை என்பதும் மொழியியலார் அறிந்த உண்மை. ஆயினும், கலைச்சொற்கள் சூழமைவு சாரா வகையில் துல்லியமாக வரையறுக்கப்பட்ட பொருளுடைய போக்கு இருப்பதால் கலையிலக்கியங்கள் தானியங்கி மொழிபெயர்ப்புக்கு உகந்தவையாகலாம். இந்தப் பட்டியலைத் தொகுக்கையில் இயன்றவரை தானியங்கி மொழிபெயர்ப்பை எளிதாக்கும் வகையில் சூழமைவு சாரா ஒருத்துவத்தைப் பாதுகாக்க முயன்றிருக்கிறேன்.
In the future there may arise software to automatically translate from English to Tamil. It is a fact known to compuater scientists that context independent languages are easier than context dependent languages to analyze and interpret. It is also a fact known to linguists that natural languages are highly context dependent. Nevertheless, since there is a trend for technical terms to have precesely defined meanings in a context independent manner, scientific literature may be more amenable to automatic translation. While compiling this list I have attempted to preserve the context independent uniqueness to ease automatic translation.
கலைச்சொற்கள் பெரும்பாலும் ஒருத்துவமானவையாயினும், விதிவிலக்குகளும் உள்ளன. கலைச்சொற்களுக்கும் இயல்மொழிச் சொற்களுக்கும் இடையே உள்ள பிரிவு கூர்மையானதன்று. இவற்றுக்கு இடைப்பட்ட சொற்களும் பல உள்ளன. எடுத்துக்காட்டாக, resolution என்ற சொல் இயல்மொழியில் resolution of a conflict, New Year’s resolution என்ற வெவ்வேறு பொருட்களிலும், அறிவியலில் resolution of an instrument, resolution of a vector என்ற வெவ்வேறு பொருட்களிலும் பயன்படுகிறது. இவ்வாறான பொருள்மயக்கங்கள் தமிழிலும் உள்ளன. செவ்வாய், புதன், வியாழன் என்ற சொற்கள் கிழமைகளையும் குறிக்கின்றன, கோள்களையும் குறிக்கின்றன. ஆங்கிலத்தில் அவ்விரு கணங்களுக்கும் வெவ்வேறான சொற்கள் உள்ளன. இதுபோன்ற இடங்களில் பொருள் வேறுபாடு தோன்றுமாறு சொற்களை பொருள்மயக்கநீக்க வேண்டிய அவசியத்துக்குள்ளாகிறோம். இந்நூலிலுள்ள பட்டியல்களில் பொருள்மயக்கநீக்கக் குறிப்புகளை அடைப்புக்குறிகளுக்குள் தருவதன்மூலம் ஒவ்வொரு பதிகையும் ஒருத்துவமானதாக இருக்குமாறு அமைக்க முயன்றிருக்கிறேன்.
Although technical terms are mostly unique, there are exceptions too. There is no sharp distinction between words of natural language and scientific terms. There are many words at intermediate levels. For example, the word resolution is used in natural language as in resolution of a conflict and New Year’s resolution with different meanings; and in science as resolution of an instrument and resolution of a vector with different meanings. Such ambiguities are present in Tamil too. The words செவ்வாய், புதன், வியாழன் represent days of the week as well as planets. In English there are different words for the two sets. In such situations, we have a need to disambiguate words in order to distinguish the meanings. I have attempted to make each entry in the tables of this book unique by giving disambiguating notes witihin parentheses.
ஆங்கிலத்தில் ஒரே பொருளைத் தரும் பல சொற்களும் உள்ளன. Lattice, grid, grill ஆகிய மூன்று சொற்களும் கிட்டத்தட்ட ஒரே பொருளுடையவை. ஆயினும், அறிவியலில் lattice என்ற சொல்லைப் பயன்படுத்தும் இடங்களில் grid பயன்படுத்துவதில்லை; திருப்பியவாறும். Lattice என்ற சொல்லுக்கு நிகராக ஒரு தமிழ்ச் சொல்லையும், grid என்பதற்கு நிகராக மற்றொரு தமிழ்ச்சொல்லையும் நாம் தேர்ந்தெடுத்து இயைபுடன் பயன்படுத்த வேண்டும். அப்படியானால்தான், மீள்திருப்ப மொழிபெயர்ப்பின்போது சரியான ஆங்கிலச் சொல்லைப் பெற இயலும்.
In English there are many words with the same meaning. The three words lattice, grid, and grill mean nearly the same thing. However, in scientific contexts where lattice is used, grid is not used and vice versa. We should select a Tamil word corresponding to lattice and another Tamil word for grid and use them consistently. Only then we can get the correct English word during reverse translation.
இணை என்பது தமிழில் பலபொருள் ஒரு சொல்லாக உள்ளது. pair, connection, parallel, bond, double, doublet, couple, consistent, agreement, ortho போன்ற பல ஆங்கிலச் சொற்களுக்கு நிகராக இச்சொல்லைப் பயன்படுத்தும் ஒரு போக்கு நமக்கு இயல்பாகவே உள்ளது. மேலும், internet-க்கும் இணையம் என்ற சொல் வழக்கில் வந்துவிட்டது. இணை என்ற சொல்லை pair என்பதற்கு ஒதுக்குவது நல்லது. அப்படியானால், மற்றக் கருத்துருக்களுக்கு இச்சொல்லைப் பயன்படுத்தாமல் அந்தந்தக் கருத்துருவுக்கு ஒதுக்கப்பட்ட சொல்லையே பயன்படுத்துவதில் நாம் மிகுந்த கவனமாக இருக்கவேண்டும். இதன் மறுபக்கமாக, இரண்டு கருத்துருக்கள் ஒரே ஆங்கிலச் சொல்லால் விவரிக்கப்படும்போது, அந்தக் கருத்துருக்கள் இரு வேறு தமிழ்ச் சொற்களால் பிரித்தறியப் படவேண்டும். எடுத்துக்காட்டாக, translation நகர்த்தல் என்ற பொருளையும், மொழிபெயர்த்தல் என்ற பொருளையும் தரலாம், இதுபோன்ற இடங்களில் நான் அடைப்புக்குறிக்குள் பொருள்மயக்கநீக்கச் சொற்களுடன் இரண்டு பதிகைகள் செய்கிறேன்.
The word இணை has many meanings in Tamil. There is a natural trend to use it corresponding to English words such as pair, connection, parallel, bond, double, doublet, couple, consistent, agreement, and ortho. Further, the word இணையம் has come into practice for internet. It is preferable to reserve the word இணை for pair. Then we should be careful not to use this word for any other concept and to use the word assigned for each of those concepts. On the other hand, when two different concepts are described by the same English word, the concepts need to be distinguished with two different Tamil words. For example, translation can mean நகர்த்தல் as well as மொழிபெயர்த்தல். In these cases, I make two entries with disambiguating words in parentheses.
தமிழில் கலைச்சொற்களை உருவாக்கப் பல முறைகள் உள்ளன. ஆறு கரிம அணுக்கள் அடங்கிய தெவிட்டிய நீரியக்கரிமத்தின் பெயர் hexane. இதைத் தமிழில் எழுதுவதற்கான மூன்று முறைகளை இங்கு எடுத்துரைக்கிறேன். முதலாவதாக, ஹெக்ஸேன் என்று எழுதுவது ஆங்கிலப் பெயரின் ஒலியைத் தமிழ் எழுத்துக்களால் எழுதுவதாகும். இம்முறையைப் பேச்சொலியியல் முறை எனலாம். இரண்டாவதாக, வடமொழி எழுத்துக்களை நீக்கிவிட்டுத் தூய தமிழ் எழுத்துக்களால் கெச்சேன் என்று எழுதுவதைத் தமிழியலாக்க முறை எனலாம். இம்முறைக்கான வழியுரைகள் நன்னூல் என்ற தொன்மையான தமிழிலக்கண நூலின் 146 முதல் 150 வரையான வாய்ப்பாடுகளில் விவரிக்கப்பட்டுள்ளன. மூன்றாவதாக, hexa- என்ற முன்னொட்டு ஆறு என்ற எண்ணைக் குறிப்பதால், ஆற- என்ற முன்னொட்டை நாமும் பயன்படுத்தி ஆறவேன் என்று எழுதுவது செந்தமிழாக்க முறையாகும்.
There are many methods to create technical words in Tamil. The name of a saturated hydrocarbon with six carbon atoms is hexane. I illustrate three methods of writing this in Tamil. First, ஹெக்ஸேன் arises from writing the sounds of the English name using Tamil letters. We may call this the phonetic method. Second, removing Tamil letters of foreign origin and using only the native Tamil letters to get கெச்சேன் may be termed the Tamilization method. The general guidelines of this method are described in the ancient Tamil grammar book நன்னூல் in formulae 146 thorugh 150. Third, since the prefix hexa- denotes the number six, using ஆற- as a prefix and writing ஆறவேன் is the செந்தமிழ் method.
தமிழில் அறிவியல் கலைச்சொற்கள் பரணமிக்கும் வரலாற்றை உற்றுப்பார்க்கும்போது ஒரு முக்கிய உண்மை தெளிவாகிறது. நான் பள்ளியில் படித்த காலத்தில் science, physics, chemistry ஆகிய சொற்கள் முறையே விஞ்ஞானம், பௌதிகம், ரசாயனம் என்றிருந்தன. தற்காலத்தில் அவை அறிவியல், இயற்பியல், வேதியியல் எனப்படுகின்றன. Solid, liquid, gas ஆகியவை திடம், திரவம், வாயு ஆகியவற்றிலிருந்து, திண்மம், நீர்மம், வளிமம் என்று மாறிவிட்டன. Meiosis மெய்யாசிஸ் என்று எழுதப்பட்ட காலம் ஒன்றிருந்தது. தற்காலத்தில் குன்றற்பிரிவு எனப்படுகிறது. இவ்வாறாக செந்தமிழ்ச் சொற்களை நோக்கி நகரும் ஒரு தெளிவான போக்கு தமிழ் மக்களிடையே இருக்கிறது. ஆசிரியர்கள் பேச்சொலியியல் முறையை இன்னும் பயன்படுத்துவதற்கான ஒரே காரணம் அவற்றுக்கு நிகரான செந்தமிழ்ச் சொற்கள் அவர்களிடம் இல்லாததே என்று எனக்குத் தோன்றுகிறது. அவ்வாறான சொற்களை அவர்களுக்கு அளிப்பதே இந்நூலின் நோக்கம்.
An important fact becomes obvious when we examine the history of evolution of technical terms in Tamil. When I was in school the words science, physics, and chemistry were விஞ்ஞானம், பௌதிகம், and ரசாயனம் respectively. At present they are written as அறிவியல், இயற்பியல், and வேதியியல். Solid, liquid, and gas changed from திடம், திரவம், and வாயு to திண்மம், நீர்மம், and வளிமம். There was a time when meiosis was written as மெய்யாசிஸ். At present it is குன்றற்பிரிவு. Thus there is a clear tendency among Tamil people to move towards செந்தமிழ் terminology. The only reason I can envision for authors to still use the phonetic method is that the corresponding செந்தமிழ் terms are not available to them. The purpose of this book is to make such terms available to them.
கலைச்சொற்கள் செந்தமிழில் இருக்கவேண்டும் என்ற முடிபு ஒரு தனிமனிதனின் தமிழ்ப் பற்றால் எழுந்ததன்று. தன்னியைபுடைய பட்டியலை உருவாக்கும் நோக்கத்தின் தவிர்க்கவியலாத பின்விளைவுதான் அது. செந்தமிழாக்கமா, தமிழியலாக்கமா, ஒலியாக்கமா என்றெல்லாம் விவாதித்துக்கொண்டிராமல், நாம் இன்று காணும் செந்தமிழ்ப் போக்கு முற்றுப்பெறுமாறு விரைவில் நீட்டி விடுவதே நலம் பயக்கும். இல்லாவிட்டால், தமிழ் அறிவியல் ஒரு ஒழுங்கில்லாத, இயைபற்ற, கலப்படமான மொழியால் எழுதப்படுவது தொடர்வதுடன், அது செந்தமிழை நோக்கி மிக மெதுவாகப் பரிணமித்துக் கொண்டிருக்கும். அவ்வாறான பரிணாமம் மாணவர்களுக்குக் குழப்பத்தையே விளைவிக்கும். Meiosis என்பதைக் குன்றற்பிரிவு என்று எழுதினால், mitosis என்பதை மைட்டாசிஸ் என்று எழுதுவது இயைபின்மை; அதை இழையுருப்பிரிவு என்று எழுதுவதே இயைபுடைமை. Respiration என்ற சொல்லுக்கு மூச்சுவிடல் என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்தால்; அது மாறாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். சுவாசம் என்ற சொல்லைத் தேர்ந்தால் செந்தமிழ் விரும்புவோர் மீண்டும் அதை மாற்றக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
The conclusion that technical words should be in செந்தமிழ் does not arise from an individual’s love for the language. It is an inevitable consequence of making a self-consistent list. Instead of arguing among செந்தமிழ், Tamilization, and phonetic method, my view is that it is beneficial to extrapolate quickly so that the current trend towards செந்தமிழ் may be completed. Otherwise, science in Tamil would continue to be written in a mixed, inconsistent, and chaotic language; and it will very slowly evolve towards செந்தமிழ். Such an evolution can only cause confusion to students. If meiosis is written as குன்றற்பிரிவு, then it is inconsistent to write mitosis as மைட்டாசிஸ்; it is consistent to write it as இழையுருப்பிரிவு. If we choose மூச்சுவிடல் for respiration, it is expected not to change. If we choose சுவாசம், there is a possibility that the செந்தமிழ் proponents would change it again.
ஆகவே, கலைச்சொற்கள் இயன்றவரை செந்தமிழிலேயே இருக்குமாறு அமைத்திருக்கிறேன். செந்தமிழச் சொல் கிடைக்காத சில இடங்களில் தமிழியலாக்கிய ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துகிறேன். வெளிநாட்டு அறிவியலாளர்களின் பெயர்களை எழுதும்போது, வடமொழி எழுத்துக்களையும் ஃப வரிசை எழுத்தையும் பயன்படுத்தி, சரியான உச்சரிப்பின் மிக அருகிலான எழுத்துக்களால் எழுதுகிறேன். ஆனால் அவர்கள் பெயர்களால் வழங்கும் விதிகள், கருவிகள், கொள்கைகள், வழிமுறைகள் இவ்வாறானவற்றைக் கலைச்சொற்களாகக் கருதி அவற்றைத் தமிழியலாக்கி எழுதுகிறேன். எடுத்துக்காட்டாக, ஜார்ஜ் பெந்தம், ஜோசஃப் டால்ற்றன் ஹுக்கர் ஆகியோர் வழங்கிய வகைப்பாட்டு முறை பெந்தங்குக்கர் வகைப்பாடு என்றும், ஜார்ஜ் லக்லாஞ்சி என்பவர் கண்டுபிடித்த மின்கலம் அவர் பெயரால் இலக்கலாஞ்சி மின்கலம் என வழங்கப் படுகிறது என்றும் எழுதலாம். இங்கு அறிவியலாளர் தமிழர் அல்லாராதலால், அவர்களுடைய பெயர்கள் அயல் ஒலிகளைக் கொண்டிருப்பதுடன், தமிழ் இலக்கண விதிகளையும் மீறுகிறன்றன (லகரத்தில் தொடங்குவதும், ககர ஒற்றைத் தொடர்ந்து லகரம் வருவதும்). அறிவியலாளர்களின் பெயர்களை மாற்றுவதற்கு நமக்கு உரிமையில்லை. இதுபோன்ற தவிர்க்கவியலாத நேரங்களில் பயன்படுத்தத்தான் வடமொழி எழுத்துக்களைத் தமிழில் நம் முன்னோர் சேர்த்திருக்கின்றனர். ஆயினும் வகைப்பாட்டு முறையையும் மின்கலத்தையும் குறிக்கும் பெயர்ச்சொற்களைத் தமிழிலிக்கண விதிகளைப் பின்பற்றும் வகையில் வடிவமைத்துக்கொள்ளும் உரிமை நமக்குண்டு.
Hence I have written technical words in செந்தமிழ் as much as possible. On some occations where I could not find செந்தமிழ் words, I have used Tamilized English words. While writing the names of foreign scientists, I have used Tamil letters of foreign origin and ஃப series of letters that are closest to the correct pronunciation. However, I consider the laws, instruments, principles, processes etc that are named after them as technical terms; and I Tamilize them. For example, we can write ஜார்ஜ் பெந்தம், ஜோசஃப் டால்ற்றன் ஹுக்கர் ஆகியோர் வழங்கிய வகைப்பாட்டு முறை பெந்தங்குக்கர் வகைப்பாடு and ஜார்ஜ் லக்லாஞ்சி என்பவர் கண்டுபிடித்த மின்கலம் அவர் பெயரால் இலக்கலாஞ்சி மின்கலம் என வழங்கப் படுகிறது. Here since the scientists are not Tamilians, their names not only contain foreign sounds but also violate Tamil grammatical rules (beginning with ல and க்ல combination). We have no right to change scinetists’ names. It is for use under such unavoidable circumstances that our ancestors have included foreign letters into Tamil. However, we do have the right to design nouns representing the classification method and the electric cell to satisfy Tamil grammatical rules.
புதிய செந்தமிழ்ச் சொற்களை முதலில் சந்திக்கும்போது அவை வேடிக்கையாகத் தோன்றலாம். ஹெக்ஸேன் என்று சொல்லிப் பழகியவர்களுக்கு ஆறவேன் என்று சொல்வது வேடிக்கையாகத்தான் தோன்றும். விஞ்ஞானம் என்று சொல்லிப் பழகியவர்களுக்கு அறிவியல் என்று சொல்வது முதலில் வேடிக்கையாகத்தான் இருந்தது. இப்போது அறிவியல் என்று சொல்வதே இனிமையாக இருக்கிறது. கணினி, குறுந்தகடு, இணையம், புகுபதிகை, கடவுச்சொல் போன்ற சொற்களை முதலில் நாம் கேட்கும்போது வேடிக்கையாகத் தோன்றின. ஆனால் குறுகிய காலத்திலேயே நாம் அவற்றைப் பயன்படுத்திப் பழகிவிட்டோம்.
On first encounter the செந்தமிழ் words may seem funny. Saying ஆறவேன் would seem funny to those who are used to saying ஹெக்ஸேன். Saying அறிவியல் did at first seem funny to those who were used to saying விஞ்ஞானம். Now we like saying அறிவியல். Words like கணினி, குறுந்தகடு, இணையம், புகுபதிகை, கடவுச்சொல் did seem funny when we first heard them. But we got accustomed to using them over a short period of time.
தமிழ்ச் சொற்களை ஆக்கும்போது கவனிக்க வேண்டியவை திட்டவட்டம், ஒருத்துவம், துல்லியமான பொருள், இயன்றவரை செந்தமிழ் ஆகியவை. ஒரு தமிழ்க் கலைச்சொல் ஒரு கருத்துருவைக் குறிப்பதாகவும் அக்கருத்துரு எப்போதும் அதே சொல்லால் குறிப்பதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறான சொல்லைத் தேர்வுசெய்வதற்காகக் கீழ்க்கண்ட வழியுரைகளைக் கடைப்பிடிக்கிறேன்:
- வேற்று நாட்டு அறிவியலாரின் பெயர்கள் இயன்றவரை உச்சரிப்பு மாறாமல் தமிழெழுதப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவ்வாறு தமிழெழுதும்போது வடமொழி எழுத்துக்களையும், F ஒலியைக் குறிக்கும் ஃப என்ற எழுத்தையும் பயன்படுத்துவது தவிர்க்கவியலாதது.
- ஆனால் அறிவியலில் வெகுவாகப் பயன்படும் ஒரு கருத்துரு ஓர் அறிவியலாளர் பெயரால் வழங்கும்போது, அது கலைச்சொல்லாகக் கருதப்பட்டுத் தமிழியலாக்கம் செய்யப்படுகிறது.
- அறிவியலார் பெயரால் வழங்கப்படாத ஒரு கருத்துருவுக்கான செந்தமிழ்ச் சொல் ஏற்கெனவே பழக்கத்தில் இருந்தால், அச் சொல் ஏற்கப்படுகிறது.
- அவ்வாறான பல சொற்கள் பழக்கத்தில் இருந்தால், கருத்துருவை மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் குறிக்கும் ஒரு சொல் அவற்றுள்ளிருந்து தேர்வுசெய்யப்படுகிறது.
- பழக்கத்திலிருக்கும் ஒரு சொல் வேறொரு கருத்துருவையும் குறிப்பதாயிருந்தால், அவற்றுள் ஒன்றுக்கு வேறொரு சொல்லைத் தேர்வுசெய்வதன் மூலம் பொருள்மயக்கம் நீக்கப்படுகிறது.
- பழக்கத்திலிருக்கும் செந்தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடிக்க என்னால் இயலாவிட்டால், கருத்துருவின் பொருள் விளங்குமாறும் வேறொரு கருத்துருவைக் குறிப்பிடாமலுமான ஒரு புதிய சொல் உருவாக்கப்படுகிறது.
- அவ்வாறு உருவாக்க இயலாவிட்டால், ஆங்கிலத்தில் பழக்கத்திலிருக்கும் சொல் செந்தமிழ்ச் சொல்லாகத் தோன்றும் வகையில் தமிழியலாக்கப்படுகிறது.
The points to note while making up Tamil words are definiteness, uniqueness, precise meaning, and as close to செந்தமிழ் as possible. A Tamil technical word should denote a concept and that concept should always be denoted by that word. I adhere to the following guidelines in order to select such a word.
- The names of foreign scientists are written in Tamil with least change in pronunciation. Tamil letters of foreign origin and ஃப for F sound are inevitably used for this purpose.
- However, when a scientific concept is named after a scientist, the name is considered a technical tern and is Tamilized.
- If there is a செந்தமிழ் word in usage for a concept not named after a scientist, the word is accepted.
- If there are many such words in usage, one is chosen among them to denote the concept clearly and precisely.
- If the word in usage also denotes another concept, ambiguity is removed by chosing another name for one of them.
- If I cannot find a செந்தமிழ் word in usage, a new word is coined in such a way that it clarifies the meaning and does not denote any other concept.
- If I cannot coin such a term, I tamilize the word in English usage to make it appear செந்தமிழ்.
சொல்லாக்கமும் மொழியியலாக்கமும் ஆகிய முறைகள் தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் பின்பற்றப் படுகின்றன. சீன மொழியில் வேதித்தனிமங்களின் பெயர்கள் அடங்கிய ஆவர்த்தன அட்டவணையை படம் 1 காட்டுகிறது. சதுர வடிவிலுள்ள சீன எழுத்துக்கள் தனிமங்களின் பெயர்களேயன்றி அடையாளங்களல்ல. அடையாளங்கள் உரோமானிய எழுத்துக்களாலேயே குறிக்கப் பட்டுள்ளன. அணு எண் 113 முதல் 118 வரையுள்ள புதிய செயற்கைத் தனிமங்களுக்கு இந்த அட்டவணையைத் தயாரித்த காலத்தில் பெயரிட்டிருக்கவில்லை போலும். பிறமொழிச் சொற்கள் சப்பானிய மொழியில் தகவமைந்ததற்கு இதோ இரண்டு எடுத்துக்காட்டுகள். Christmas クリスマス(கிரிசுமசு) ஆனது. சோடியம் என்பதற்கான சொல் ナトリウム (நடோரியூமு) அதன் Natrium என்ற இலத்தீன் மொழிப் பெயரிலிருந்து வந்தது.
Translation and linguistic naturalization of technical words are followed in languages other than Tamil. படம் 1 shows the periodic table containing the Chinese names of chemical elements. The square chinese characters are names of elements not symbols. The symbols are written with Roman letters. Apparently elements 113 through 118 had not yet been named when this table was prepared. Here are two examples where the Japanese language has adapted words from other languages. Christmas becomes クリスマス (கிரிசுமசு). The word for sodium ナトリウム (நடோரியூமு) comes from its Latin name Natrium.
படம் 1 சீன மொழியில் வேதித் தனிமங்களின் ஆவர்த்தன அட்டவணை
வேதியியலில் வேதி இனங்களின் பெயர்களை அமைமுறையாக எழுதுவதற்கு விதிகள் உள்ளன. இந்த விதிகள் பன்னாட்டு தூய மற்றும் பயன்பாட்டு வேதியியலார் (பதூபவே) ஒன்றியத்தால் உருவாக்கப்பட்டவை. அதைப்போலவே, தாவர இனங்களைப் பெயரிடுவதற்காக தாவரவியல் பெயரிடுமுறையின் பன்னாட்டு விதிமுறை (தாபவி) என்பதும், விலங்கு இனங்களைப் பெயரிடுவதற்காக விலங்கியல் பெயரிடுமுறையின் பன்னாட்டு விதிமுறை (விபவி) என்பதும் உள்ளன. இந்த விதிகள் வேதிப்பொருள்கள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் பெயர்கள் ஆங்கிலத்திலேயே இருக்கவேண்டும் என்பதை உள்ளுரைக்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது. இந்த விதிகளை ஊன்றிப் படிக்கும்போது அப்படியான ஓர் உள்ளுரை இல்லை என்பது விளங்குகிறது. உண்மையில் இந்த விதிகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விதிகளுக்கிணங்கிய பெயர்கள் அந்தந்த மொழிகளில் உருவாக்கப் பட்டுள்ளன.
There are rules in chemistry to write the names of chemical species systematically. These rules were made by International Union of Pure and Applied Chemistry (IUPAC). Similarly there are International Code of Botanical Nomenclature (ICBN) for naming botanical species and International Code of Zoological Nomenclature (ICZN) for naming zoological species. The question arises whether these rules imply that the names of chemical substances, plants, and animals be in English. When these rules are studied closely it becomes clear that there is no such implication. In fact, these rules have been translated into many languages and names conforming to the rules have been created in those languages.
பொருட்களும் செய்முறைகளும்
Materials and methods
இந்த நூலின் நடப்புப் பதிப்பில் உள்ள பட்டியலுக்காக தமிழ்நாடு அரசு பதிப்பித்த பாடநூற்களிலிருந்து கலைச்சொற்களைத் தொகுத்தேன். ஒன்றிலிருந்து பன்னிரண்டு வரையான வகுப்புக்களுக்குரிய பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு அரசினரின் இணையதளத்தில் கிடைக்கின்றன. தமிழ் விக்சனரியையும் ஒரு வளமாகப் பயன்படுத்தினேன். பொதுவான ஓர் ஆங்கில அகராதி www.dictionary.com என்ற இணையதளத்தில் கிடைக்கிறது. அதை ஆங்கிலச் சொற்களின் சரியான வரையறைகளையும் பன்மடிப் பொருள்களையும் புரிந்துகொள்வதற்காகப் பயன்படுத்தினேன். தேவைக்குத் தகுந்தபடி மேற்பட்ட தகவல்களைப் பெறுவதற்காகப் பொதுவான கூகிள் தேடல்களையும் பல விக்கிப்பீடியா ஆய்வுரைகளையும் பயன்படுத்தினேன். தொகுப்பின்போது வளர்ந்து வரும் பட்டியலை மேலாள்வதற்காக Microsoft Excel என்ற மென்பொருளைப் பயன்படுத்தினேன். இந்த மென்பொருளில் தேவையானபோது தமிழ் அகரவரிசையிலோ அல்லது ஆங்கில அகரவரிசையிலோ பட்டியலை மறுமுறைமையாக்கும் வசதி இருக்கிறது. தமிழில் தொடுதட்டச்சுவதற்கு ஒரு தமிழ்99 விசைப்பலகையைப் பயன்படுத்துகிறேன்.
For the list contained in the current version of this book I collected technical words from the textbooks published by Tamilnadu government. Textbooks for first through twelfth standards are available at Tamilnadu Government’s website. I also used Tamil Wiktionary as a resource. A general English dictionary is available at www.dictionary.com. I used it in order to understand the correct definitions and multiple meanings of English words. I also used general Google searches and several Wikipedia articles for additional information as needed. I used Microsoft Excel as the software to manage the growing list during collection. There is facility in this software to reorder the list according to Tamil or English alphabetical order as needed. I use a Tamil99 keyboard for touch-typing in Tamil.
பத்தாம் முதல் பன்னிரண்டாம் வகுப்புக்களுக்குரிய அறிவியல் தொழில்நுட்பப் பாடப்புத்தகங்களை வாசித்துப் பார்த்துக் கலைச்சொற்களைக் குறிப்பெடுத்தேன். ஒரே புத்தகத்தின் தமிழ் பதிப்பையும் ஆங்கிலப் பதிப்பையும் அருகருகே வைத்து வாசித்தேன். ஆங்கிலப் பதிப்பில் ஒரு கலைச்சொல்லை எதிர்கொண்டபோது தமிழ்ப் பதிப்பில் அதற்கு நிகராகவுள்ள சொல்லைக் கண்டுபிடித்தேன். ஆங்கிலச் சொற்கள் நன்கு நிறுவப்பட்டவையாதலால் அவற்றை இருந்தபடியே குறித்துக்கொண்டேன். நிகரான ஒரு தமிழ்ச் சொல்லைப் பெற கீழ்க்கண்ட படிகளாலான ஒரு செய்முறையைப் பின்பற்றினேன்:
- புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பிலுள்ள சொல் முன்சொன்ன வழியுரைகளைப் பின்பற்றினால் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.
- தமிழ்ப் புத்தகத்திலுள்ள சொல் வழியுரைகளுடன் இணங்காவிட்டால், ஆங்கிலச் சொல்லைத் தமிழ் விக்சனரியில் தேடுகிறேன். சொல் அங்கு இருந்தால், நிகரான தமிழ்ச் சொல்லை அல்லது பல சொற்களிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறேன்.
- ஆங்கிலச் சொல் விக்சனரியில் இல்லாவிட்டாலோ அல்லது அங்குள்ள தமிழ்ச்சொற்களில் எதுவும் வழியுரைகளைப் பின்பற்றாவிட்டாலோ, ஒரு புதிய சொல்லைக் கட்டமைக்க முயல்கிறேன். அதற்காக முதலில் இணையவழி ஆங்கில அகராதியில் பொருள் காண்கிறேன். அந்த அகராதி பெரும்பாலும் கலைச்சொல்லின் கிரேக்க அல்லது இலத்தீன் போன்ற மூலச்சொல்லைத் தருகிறது. அவசியமானால் விக்கிப்பீடியா ஆய்வுரை அல்லது பொதுவான கூகிள் தேடல் மூலம் இந்தச் சொல் அறிவியலில் பயன்படும் சூழமைவுகளைப் பற்றிய தகவல்களையும் சேகரிக்கிறேன். இவற்றின் அடிப்படையில் வழியுரைகளைப் பின்பற்றும் ஒரு சொல்லை உருவாக்க முயல்கிறேன்.
- வேறெதிலும் வெற்றி கிடைக்காவிட்டால் இறுதி முயற்சியாக ஆங்கிலச்சொல்லைப் பேச்சொலி மூலம் தமிழாக்குகிறேன். இதற்காக முதலில் ஆங்கில அகராதியில் சரியான உச்சரிப்பைப் பார்க்கிறேன். இந்த உச்சரிப்பு தமிழுக்கு மிகவும் அயலாகத் தோன்றாவிட்டால் அதை அப்படியே வைத்துக்கொள்கிறேன். அயலாகத் தோன்றினால் அதைத் தமிழியலாக்குகிறேன். அறிவியலாளர்களின் பெயர்கள் தமிழியலாக்குவதற்கு ஒரு விதிவிலக்கு. இயற்பெயர்களின் சரியான உச்சரிப்புகளை வடமொழி எழுத்துக்களைப் பயன்படுத்தியாவது தமிழில் மீளுருவாக்க முயல்கிறேன்.
- ஒரு புதிய சொல்லை எழுதும்போது அதனுடன் தொடர்புடையவையும் பட்டியலில் ஏற்கெனவே இருப்பவையுமான மற்றச் சொற்களை இயைபுடைமைக்காக மாற்றுவது சில நேரங்களில் அவசியமாகிறது. ஆகவே இது ஒரு மறுசுருள் வழிமுறை ஆகிறது.
படம் 2 செய்முறையைக் காட்டும் திரைநிலைப்படம்
I read the science and technology textbooks for tenth through twelfth standards and noted the technical words. I read the English and Tamil versions of the same book side by side. When I came across a technical word in the English version I spotted the corresponding word used in the Tamil verison. Since the English words are well established I noted them as such. For a corresponding Tamil word I followed a procedure with the following steps:
- If the word in the Tamil version of the book follows the guidelines mentioned above, then I take it as such.
- If the word in the Tamil book does not conform to the guidelines, I look up the English word in Tamil Wiktionary. If the word appears there, I select from the corresponding Tamil word or words.
- If the English word does not appear in Wiktionary or if none of the Tamil words listed there follows the guidelines, then I attempt to construct a word. To do this I first look at the online English dictionary for the meaning. Invariably the dictionary lists origin for technical terms, usually Greek or Latin. If necessary I look for a Wikipedia article or make a general Google search to gather some relevant context in which the term is used in science. Based on these I try to come up with a Tamil word satisfying the guidelines.
- If all else fails, as a last resort I transliterate the English word. To do this I first look in the English dictionary for the correct pronunciation. If the pronunciation does not sound too awkward in Tamil I use it as such. If it does, I Tamilize it. One exception to Tamilization is for names of Scientists. I try to reproduce the exact pronunciation of proper names in Tamil even by using letters of foreign origin.
- When writing a new word, it sometimes becomes necessary to modify related words already on the list for consistency. Thus this is an iterative process.
தமிழ் ஆங்கிலப் பாடப்புத்தகங்களின் பக்கங்களையும் வளர்ந்து வரும் பட்டியலின் ஒரு பகுதியையும், ஓர் இணைய மேலோடியையும் என் கணினித் திரையில் ஒரே நேரத்தில் பார்க்கும்படியான ஒரு பாவு சாளர அமைப்பைப் படம் 2 திரைநிலைப்படமாகக் காட்டுகிறது. மேலோடியில் உள்ள தத்தல்களுள் தமிழ் விக்சனரியையும், ஆங்கில அகராதியையும், கூகிள் தேடல் முடிவுகளையும் காட்டுபவை அடங்கியுள்ளன. எல்லா வளங்களும் கணினி மூலமும் இணையம் மூலமும் கிடைப்பதால் இந்த வேலை பல வன்னகல் புத்தகங்களைக் கையால் புரட்டும் முறையை விட எளிதாகிறது.
படம் 2 shows a tiled window system as a screenshot where I can see the pages of Tamil and English textbooks, a part of the growing list, and an internet browser at the same time on my computer screen. The browser contains tabs showing Tamil Wiktionary, English dictionary, and Google search results. Since all resources are available through computer and internet, this work becomes easier than flipping through many hard copy books by hand.
மேலே குறிப்பிட்ட பள்ளிப் பாடநூல்கள் எல்லாவற்றையும் வாசித்துக் கலைச் சொற்களைத் தொகுத்தபின், ஒருத்துவமும் திட்டவட்டமும் செயலுறுதியாகுமாறு பட்டியலைப் பரிசீலித்தேன். முதலில் பட்டியலை ஆங்கிலச் சொற்களால் அகரவரிசையாக்கி, மேலிருந்து கீழாக வாசித்தேன். ஒரே ஆங்கிலச் சொல் ஒரு தடவைக்கு மேல் வந்து அதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ்ச்சொற்கள் பட்டியலில் இருந்தால் அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன். பிறகு தமிழ்ச் சொற்களால் அகரவரிசையாக்கி மீண்டும் வாசித்து ஒரு தமிழ்ச்சொல் ஒன்றுக்கு மேற்பட்ட ஆங்கிலச் சொல்லுக்கு நிகராக வந்தால், ஒன்று தவிர மற்றவற்றுக்கு வேறு தமிழ்ச்சொற்களை எழுதினேன். இவ்வாறு எழுதும்போது புதிய சொற்களும் ஏற்கெனவே பட்டியலில் இருக்கும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இது ஒரு மறுசுருள் வழிமுறை ஆகிறது. ஆனால் இந்த மறுசுருள் விரைவில் குவிபோவதால் ஓரிரண்டு மீள்பார்வைகளில் வழிமுறை முற்றுப்பெறுகிறது. அகரவரிசையில் ஒத்த முன்னொட்டுச் சொற்கள் அருகில் தொகுக்கப்படுவதால், இந்த வழிமுறை இயைபுடைமையை ஓரளவு சரிபார்ப்பதற்கும் உதவுகிறது.
After reading all textbooks mentioned above and collecting all technical words, I examined the list to guarantee uniqueness and definiteness. First I alphabetized the list on the English words and read it from top to bottom. If the list contained an English word more than once with more than one Tamil word corresponding to it, I chose one among them. Then I alphabetized on the Tamil words and read again. If a Tamil word appeared corresponding to more than one English word, I wrote new Tamil words for all but one. While writing such new words there is a chance that the new words may already be on the list. Hence this becomes an iterative process. But since this iteration converges rapidly, the process terminates after a few reviews. Since words with similar prefixes are grouped together in the alphabetic order, this process also helps to check consistency to some extent.
புதிய கலைச்சொற்களை உருவாக்கும்போது இலக்கண விதிகள் அனைத்தையும் கடைப்பிடித்தால்தான் அச் சொற்கள் செந்தமிழ்ச் சொற்களாக இருக்கும். ஒரு சில விதிகளைத் தளர்த்தினால் பிறகு மற்ற சில விதிகளையும் தளர்த்தலாம்; அவ்வாறே எல்லா விதிகளையும் தளர்த்திவிடலாம். எந்தெந்த விதிகளைத் தளர்த்தலாம் என்பதற்குத் திட்டவட்டமான வழியுரைகள் இல்லை. சொல்லாக்கத்தின்போது மனதில் கொள்ளவேண்டிய விதிகளுள் சில கீழ்வருவன:
- தமிழ்ச்சொல் புள்ளிவைத்த ஒற்றெழுத்தில் தொடங்காது. Gram என்ற சொல்லைத் தமிழில் க்ராம் என்று எழுதுவது இந்த விதியை மீறும். ஆகவே கிராம் என்று எழுதுகிறோம்.
- டகர, ணகர, ரகர, லகர, ழகர, ளகர, றகர, னகர ஆகிய எழுத்துக்கள் எந்த உயிரெழுத்துடன் சேர்ந்தும் சொல்லின் முதலில் வாரா. டேனியலின் மின்கலம், ரேடியம், லக்கலாஞ்சியின் மின்கலம் போன்றவை இந்த விதியை மீறுவதால் முறையே இடேனியலின் மின்கலம், இரேடியம், இலக்கலாஞ்சியின் மின்கலம் என்று சொல்கிறோம்.
- வல்லின ஒற்றுக்களும் ஙகர ஒற்றும் (அதாவது, க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய எழுத்துக்கள்) தமிழ்ச் சொல்லின் கடைசி எழுத்தாக இருக்காதவை. (நன்னூல் 107). அசிற்றிக் அமிலம் என்பது இந்த விதியை மீறும். ஆகவே அசிற்றிக அமிலம் என்கிறோம்.
- ககர, சகர, தகர, பகர ஒற்றுக்களை அடுத்து அதே எழுத்தின் உயிர்மெய் வடிவமே வரலாம்: வேறெந்த மெய்யெழுத்தும் வராது. சக்கரம், உச்சி, மீத்தேன், உப்பு ஆகியவை சரியானவை. ஆனால், மெட்ரிக அமைப்பு என்றும், பாக்டீரியம் என்றும் எழுதுவது இந்த விதியை மீறும். ஆகவே, மெட்டிரிக அமைப்பு என்றும் பாட்டீரியம் என்றும் எழுதுகிறோம்.
- ரகர, ழகர ஒற்றுக்களை அடுத்து அதே எழுத்து தனியாகவோ உயிர்மெய்யாகவோ வராது. சர்ரியல் என்ற சொல் இந்த விதியை மீறுகிறது. ஆகவே இயல்புமீறு என்று தமிழாக்கிச் சொல்கிறோம்.
- மேற்சொன்ன ஆறு தவிர மற்ற பன்னிரண்டு ஒற்றுக்களையும் தொடர்ந்து (அதாவது, ங், ஞ், ட், ண், ந், ம், ய், ல், வ், ள், ற், ன் ஆகிய எழுத்துக்களைத் தொடர்ந்து) எந்த எழுத்தும் வரலாம். (நன்னூல் 110) இந்த விதிகளைக் கடைப்பிடித்தால் தமிழின் இயல்பு மாறாமல் இருக்கும். தமிழில் எழுதிய அறிவியல் நூல்கள் வேற்று மொழியில் எழுதியது போன்று இப்போதிருக்கும் தன்மை மறையும். நன்னூல் ஆசிரியர் பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே என்று சொன்னது உண்மைதான். ஆனால் அவர் சொன்னதை நாம் தவறாகப் புரிந்துகொண்டோம். தமிழின் இயல்பைப் பாதுகாக்க நாம் கடைப்பிடிக்க வேண்டிய இலக்கண விதிகளை நாநூற்றறுபத்தொரு வாய்ப்பாடுகளால் விவரித்துக் கூறிவிட்டு இறுதி வாய்ப்பாடான 462-ஆம் வாய்ப்பாட்டில் நூலின் புறனடையாக இதைச் சொன்னார். மேலும் அவர் ‘பழையன கழித்தலும், புதியன புகுத்தலும்’ என்று சொல்லவில்லை. அவை காலத்தின் போக்கால் தானாக நிகழ்ந்தால் அதில் தவறில்லை (வழுவல) என்று சொல்கிறார். இக்காலத்தில் அறிவியல் தொடர்பான சொற்களை நாம் உருவாக்குவது தவிர்க்கவியலாதது. அது புதியன புகுதலைக் குறிக்கிறது. உரல், உலக்கை, அம்மி, அம்மிக்குழைவி, ஆட்டுரல் போன்ற கருவிகளை இக்காலத்தில் நாம் பயன்படுத்துவதில்லை. அவை பழையனவாகக் கழிகின்றன.
New technical words would be in செந்தமிழ் only if we follow all grammatical rules. If we relax some of the rules, then we can relax some more rules and thus we can relax all of the rules. There is no definite guideline to say which rules can be relaxed. The following are some rules to keep in mind during the construction of new words:
- Tamil words do not start with a pure consonant that has a dot over it. Writing gram as க்ராம் would violate this rule. So we write கிராம்.
- The consonants ட, ண, ர, ல, ழ, ள, ற, ன do not start a word in combination with any vowel. டேனியலின் மின்கலம், ரேடியம், லக்கலாஞ்சியின் மின்கலம் would violate this rule. So we say இடேனியலின் மின்கலம், இரேடியம், இலக்கலாஞ்சியின் மின்கலம் respectively.
- The pure plosive consonants (க், ச், ட், த், ப், ற்) and the pure consonat ங் cannot be the last letter of a Tamil word (Nannool 107). அசிற்றிக் அமிலம் would violate this rule. So we say அசிற்றிக அமிலம்.
- Following each of க், ச், த், ப், only the same consonant in combination with any vowel can appear; no other consonant can appear. சக்கரம், உச்சி, மீத்தேன், உப்பு are correct. However, writing மெட்ரிக் அமைப்பு and பாக்டீரியம் would violate this rule. So we write மெட்டிரிக அமைப்பு and பாட்டீரியம்.
- Following each of ர், ழ் the same letter cannot appear either purely or in combination with a vowel. சர்ரியல் would violate this rule. So we write இயல்புமீறு in pure Tamil.
- Other than the six mentioned above, the remaining twelve pure consonants (ங், ஞ், ட், ண், ந், ம், ய், ல், வ், ள், ற், ன்) can be followed by any consonant (Nannool 110). If we follow these rules the nature of Tamil would be preserved. The current appearance of Tamil scientific books as if written in a foreign language would disappear. It is true that Nannool author said பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே However, we have misunderstood what he said. After expounding the rules we need to follow in order to preserve the nature of Tamil in four hundred and sixtyone formulae, he added this last 462nd formula as an exception to his book. Further, he did not word it பழையன கழித்தலும் புதியன புகுத்தலும். If these changes occur spontaneously as time goes on there is nothing wrong with it (வழுவல), he said. At the present time it is inevitable that we create scientific words. This represents புதியன புகுதல். We no longer use devices such as உரல், உலக்கை, அம்மி, அம்மிக்குழைவி, ஆட்டுரல். This represents பழையன கழிதல்.
பாட்டீரியம் என்று எழுதியதைப் பாக்டீரியம் அல்லது bacterium என்று வாசிப்பது தவறு. தமிழ் ஒரு பேச்சொலி மொழியாகும். ஆங்கிலத்தில் ஒவ்வொரு சொல்லுக்கும் எழுத்துக்கூட்டலும் உச்சரிப்பும் தனித்தனியாகத் தரப்படுகின்றன. ஆனால் தமிழின் எழுத்துக்கூட்டலிலிருந்து உச்சரிப்பு பெறப்படும். மேலும் தமிழில் ஒலியற்ற எழுத்து என்ற ஒன்றும் இல்லை. ஆகவே, இடேனியலின் மின்கலத்தை டேனியல் மின்கலம் என்றும், இரேடியம் என்பதை ரேடியம் என்றும் வாசிப்பது தவறு.
It is wrong to read பாட்டீரியம் as பாக்டீரியம் or bacterium. Tamil is a phonetic language. In English spelling and pronunciation are given separately for each word. But the Tamil pronunciation is obtained from the spelling. Further there is no such thing as a silent letter in Tamil. Hence it is wrong to read இடேனியல் மின்கலம் as டேனியல் மின்கலம் and இரேடியம் as ரேடியம்.
அறிவியல் இலக்கியத்தில் உள்ளதை உள்ளவாறே கூறுவதுதான் சிறப்பு. ‘குண்டி கழுவச் சென்றிருக்கிறான்’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘கால் கழுவச் சென்றிருக்கிறான்’ எனக் சொல்வது தமிழ் மரபு. இதை இடக்கரடக்கல் எனப் பெயரிட்டு தமிழிலிக்கணமும் ஏற்றுக்கொண்டது. ஆனால், ‘குதத்தில் புண் உள்ளது’ என்று சொல்வதற்குப் பதிலாக வைத்தியரிடம் சென்று ‘காலில் புண் உள்ளது’ என்று சொல்கிறவன் சரியான சிகிச்சையைப் பெற மாட்டான். முந்தைய சூழமைவில், எதைக் கழுவச் சென்றிருக்கிறான் என்ற விவரம் முக்கியமானதாக இல்லை. ‘ஏதோவொரு சிறு வேலையாகச் சென்றிருக்கிறான், விரைவில் வந்து விடுவான்’ என்பதுதான் முக்கியச் செய்தி. ஆகவே, குண்டி கழுவத்தான் சென்றிருக்கிறான் என்பது சொல்பவருக்குத் தெரிந்திருந்தும், சமூகச் சூழலில் அதைச் சொல்லவேண்டாமென்று ‘கால் கழுவச் சென்றிருக்கிறான்’ என்று பொய் சொல்கிறார். புரைதீர்ந்த நன்மை பயப்பதால், வள்ளுவரின் வரையறையின் படி (திருக்குறள் 292) அந்தப் பொய்யும் வாய்மை போன்று ஆகிவிடுகிறது. ஆனால், பிந்தைய சூழமைவில், புண் எங்கே இருக்கிறது என்பது முக்கியச் செய்தி. அதைப் பொறுத்தே வைத்தியரின் அடுத்த செயல் இருக்கும். ஆகவே ‘காலில் புண் உள்ளது’ என்று கூறுவது புரைதீர்ந்த நன்மை பயக்கவில்லை. அதைப்போன்றே, penis, testicle, vagina, breast, intercourse ஆகிய சொற்களுக்கு நிகராகத் தரப்பட்ட ஆண்குறி, விந்தகம், பெண்குறி, மார்பகம், கலவி என்ற சொற்களை இயல்பாகவும் இயைபாகவும் பயன்படுத்த வேண்டும். முலை என்ற சொல் தற்காலத்தில் தகாத சொல்லாகக் கருதப்படுவதால், மார்பகம் என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்தேன். இந்தச் சொல் பட்டியலில் ஒருமுறைதான் இடம்பெறுவதால், பொருள்மயக்கம் ஏற்படுமோ என்ற அச்சமின்றி எங்கும் பயன்படுத்தலாம். முக்கியமாக வைத்தியர்கள் தங்கள் நோயாளிகளிடம் பேசும்போது இதே சொற்களைப் பயன்படுத்தினால், விரைவில் பொதுமக்களும் கற்றுக்கொள்வார்கள்.
In scientific literature it is best to state things as they are. Instead of saying ‘He has gone to wash his buttocks’ it is a Tamil tradition to say ‘He has gone to wash his feet’. Naming this practice இடக்கரடக்கல் Tamil grammar has also accepted it. However, instead of saying ‘There is swelling in the anus’, if someone goes to the doctor and says ‘There is swelling in the feet’, he will not get the correct treatment. In the former context, the detail of what he has gone to wash is unimportant. ‘He has gone for a small task and will return shortly’ is the important information. Hence, eventhough the speaker knows that the man has gone to wash his buttocks, in order not to say it in a social setting, he lies by saying ‘He has gone to wash his feet’. Since it results in a flawless benefit (Thirukkural 292), according to Valluvar, the lie becomes as good as truth. However, in the latter context, the actual location of the swelling is an important information. The doctor’s next action is going to depend on it. Hence, saying ‘There is swelling on the feet’ does not result in a flawless benefit. Similarly, the words ஆண்குறி, விந்தகம், பெண்குறி, மார்பகம், and கலவி given corresponding to penis, testicle, vagina, breast, and intercourse should be used naturally and consistently. Since the word முலை is considered vulgar in modern times, I have chosen மார்பகம். Since this word appears only once in the list, it can be used everywhere without fear of loss of information. In particular, if doctors use these words while speaking to their patients, common people will soon learn them.